March 30, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றம்
சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.இந்த செயற்குழுக் கூட்டத்தில் காவிரி வாரிய விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம்.தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்டி,பிரதமர் மற்றும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டு உரிமைகளை காவு கொடுக்க கூடாது.
பாஜகவிற்கு கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்த ஓவர்டைம் உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உட்பட 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல்முறையாக ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.