• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்எல்வி ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது

March 29, 2018 தண்டோரா குழு

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி, ஜிசாட் – 6 ஏ செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான,’இஸ்ரோ சார்பில், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோளை,இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-6ஏ செயற்கைகோளானது,ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் நேற்று மதியம் 1.56 மணிக்கு தொடங்கியது.இதையடுத்து இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவியது.ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட்டானது 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது.

இதில் புதிய தொலைதொடர்பு செயற்கைகோளான ஜிசாட் 6-ஏ ஜியோசைன்ரோனஸ் 2140 எடை கொண்டதாகும். தற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில், 12வது ராக்கெட். இதில், முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ஆறாவது, ‘கிரையோஜெனிக் இன்ஜின்’ பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கி.மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கி.மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுவட்ட பாதையில் பூமியை சுற்றிவரும். ஏற்கனவே, 7 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 4 முறை இது தோல்வியில் முடிந்துள்ளது. எனவே 8வது முறையாக ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெடை இஸ்ரோ விஞ்ஞானிகள் வி்ண்ணில் செலுத்தியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க