March 29, 2018
தண்டோரா குழு
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத வீடுகளில் மார்டின் தொண்டு நிறுவனம் சார்பில் 165 கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தனர்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மை பணிகளை பொதுமக்களும்,தொண்டு நிறுவனங்களும், அரசும் செய்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாதவர்களுக்கு மார்டின் தொண்டு நிறுவனம் சார்பில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில், கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. மொத்தம் 165 கழிப்பறைகள்,19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த கழிப்பறைகளை மார்டின் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த லீமார் ரோஸ் மார்டின் கோவை மாநகராட்சியிடம் கழிப்பறைகளை ஒப்படைத்தார். தொடர்ந்து இது போல பல்வேறு பகுதிகளில் கழிப்பறைகள் இல்லாத பகுதிக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களாக கழிப்பறைகள் இல்லாமல் பொது கழிப்பறைகளை பயன்படுத்தி வந்தவர்களுக்கு தற்போது தனித்தனியே கழிப்பறைகள் கட்டி கொடுத்து உள்ளது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.