March 29, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராடி வரும் மக்களுடன் இணைந்து வரும் 1ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் அழைத்தால் கலந்து கொள்வேன் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார்
இந்நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
“ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த போராட்டம் தொடர்பாக எனக்கு அழைப்பு வரும் என ஏற்கனவே தெரியும். நேற்று எனக்கு அப்பகுதி மக்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ம் தேதி தூத்துக்குடி சென்று போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.