March 29, 2018
தண்டோரா குழு
கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையின் பழைய பிணவறையை ஒட்டி தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன.இக்கட்டிடம் சேதமடைந்து இடியம் நிலையில் இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும்,இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும்,கடை வைத்திருப்பவர்களுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.மாநகாரட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.