March 28, 2018
தண்டோரா குழு
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
டிடிவி தினகரன் குக்கா் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார்.இந்த வழக்கு விசாரணை முடிவில் டிடிவி தினகரனுக்கு குக்கா் சின்னத்தை வழங்க தோ்தல் ஆணையத்திற்கு டெல்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,இந்த உத்தரவை எதிர்த்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த விசாரணையில் இரட்டை இலை வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குக்கா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே தினகரனுக்கு குக்கா் சின்னம் ஒதுக்கக்கோரி உயா்நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனா்.
மேலும்,இரட்டை இலை சின்னம் வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிக்க வேண்டும்.