• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் விலகல்

March 28, 2018 tamilsamayam.com

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி,கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.  இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஃபேன் கிராஃப்ட் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பான வீடியோ பதிவுகளும் கிடைத்த நிலையில், தனது தவறை ஒப்புக் கொள்வதாக ஃபேன் கிராஃப்ட் தெரிவித்தார்.  பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில்,அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். இதையடுத்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விரைவில் புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க