• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வனத்துறை உழியர்களுக்கு யோக பயிற்சி

March 28, 2018 தண்டோரா குழு

கோவையில் வனத்துறை உழியர்களுக்கு ஒரு நாள் யோக பயிற்சி இன்று(மார்ச் 28)நடைபெற்றது.

வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி சுமை காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.காவல்துறையினர் போலவே வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றுவதால் கடுமையான பணி சுமையை எதிர்கொள்கின்றனர்.

இதனையடுத்து கோவையில் மண்டலத்தில் பணியாற்றும் வனச்சரகர்கள், வனவர்கள்,வனக்காப்பாளர்கள்,வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு ஒரு நாள் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது.

வடகோவையில் உள்ள வனத்துறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில் பணிச்சுமையில் உள்ள தங்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும்,இது போன்று அடிக்கடி நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க