March 27, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி நதிநீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.இதனையடுத்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் புதுடில்லியில் வழக்கறிஞர் சேகர்நாப்தே-வை சந்தித்து கலந்தாலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மார்ச் 31-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சேகர்நாப்தே தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.