March 27, 2018
தண்டோரா குழு
கோவையின் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று(மார்ச் 27)நடைபெற்றது.
கோவையை அடுத்த பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.