March 27, 2018
தண்டோரா குழு
சமூக வலைதளங்களில் திமுக மகளிரணியினர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் திமுக மகளிரணியினர் இன்று(மார்ச் 27) புகார் அளித்தனர்.
திமுக மகளிர் அணியினரை சேர்ந்தவர்களை சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க வினர் அவதூறாக பேசுவதாகவும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகர காவல் ஆணையரிடத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது.
கடந்த வாரம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டது போல் உள்ள புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதும் பா.ஜ.கவை சேர்ந்த ராமா,ஜெகதீசன் என்ற இருவரும் புகைப்படத்தில் இருக்கும் திமுக மகளிரணியை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசியிருப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.புகார் மனுவுடன்,முகநூலில் அவறூதாக பேசியிருக்கும் நகலையும் இணைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவிடம் புகார் கொடுக்கப்பட்டது.