தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா – ஒரு கப்
கெட்டி தயிர் – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 1
மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை :
தண்ணீர் சேர்க்காமல் சேமியாவை தயிரில் சுமார் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.
இத்துடன் ஊரை வைத்த சேமியாவை சேர்த்து சிறிது மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து, இந்தக் கலவையில் இருந்து சிறிய சிறிய அடைகளாக ஊற்றி, மெதுவாக பரப்பி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைக்கவும். சுவையான மொறுமொறு சேமியா அடை ரெடி. சேமியா என்றால் தெறித்து ஓடும் சிறுவர்கள் இந்த அடையை சுவைத்து உண்பார்கள்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்