தல அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக படபிடிப்புகள் ரத்து செய்யபட்டுள்ளன. இதற்கடையில், தல அஜித் தனது நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங்கில் பற்றி அறிய முடிவு செய்தார். அதற்கான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்றுள்ளார். அங்கு ஏரோ மாடலிங் துறையை சேர்ந்த மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்த அஜித், அக்கல்லூரியில் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்களை சந்தித்தார்.
அப்போது அஜித்தை சந்தித்த மாணவர்கள், 12 மணி நேரம் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூற, அதற்கு அஜித் “சாரி..பா உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்” எனக் கூற அங்குள்ள மாணவர்களை நெகிழவைத்துள்ளது. அப்போது அந்த மாணவர்கள் அஜீத்துடன் நின்று புகைபடம் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அவர்கள்,
தாங்கள் ஒரு விஜய் ரசிகர்கள் எனவும், அந்த இரவுநேரத்தில் மிகச்சோர்வாக இருந்த அவர் எங்களுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு எங்களிடம் எளிமையாக நடந்துக் கொண்டது அவரின் சாந்தகுணத்தை காட்டுவதாக கூறியுள்ளனர்.
தற்போது அந்த புகைபடம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு
கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை
இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு