March 26, 2018
தண்டோரா குழு
மார்ச் 29 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29 மகாவீரர் ஜெயந்தி, மார்ச் 30 புனிதவெள்ளி, மார்ச் 31 ஆண்டு கணக்கு முடித்தல், ஏப்ரல் 1 ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்பதற்காக ஏப்ரல் 2ம் தேதியும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் வங்கிகளுக்கு தொடர் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை, வாடிக்கையாளர்கள் முன்னரே திட்டமிட்டு மேற்கொண்டால் கடைசி நேர சிரமத்தை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.