• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா

March 26, 2018 தண்டோரா குழு

இசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின்கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா, “ உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை என சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான். உலகத்திலேயே அவருக்கு மட்டும் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்றார்.

இது கிறிஸ்த்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி இளையராஜாவின் வீட்டின் முன் போராட்டம் நடத்த சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை காவல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க