March 26, 2018
தண்டோரா குழு
தடையை மீறி அதிமுக எம்பி சசிகலா புஷ்பா 2வது திருமணம்.
நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா (வயது 41). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.
இதற்கிடையே சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26-ந் தேதி வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதற்கிடையில், ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள தடை விதித்தது.
இந்நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்த சசிகலா புஷ்பா ராமசாமி என்பவருடன் தடையை மீறி 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். டெல்லியில் நட்சததிர ஓட்டலில் சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் நடைபெற்றுள்ளது.