March 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(மார்ச் 24)கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை காரணமாக பொதுமக்கள்,மூச்சுத்திணறல்,நெஞ்சுஎரிச்சல்,கருச்சிதைவு,புற்றுநோய்,சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான தண்ணீர்,தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுக்கப்படுவதால்,நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து இன்று தூத்துக்குடி, புதியம்புத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.