• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் – ரஜினி மக்கள் மன்றம்

March 24, 2018 தண்டோரா குழு

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் பொதுநலம் விடுத்து தங்கள் சுய நலத்துக்காக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்படக்கூடாது என்று  ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிடபட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ், ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்வதாக  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்தார்.

இதனையடுத்து மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். தம்புராஜை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் 146 பேர் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார்.146 பேரும் ராஜினாமா கடிதத்தை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க போவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில்,திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் பொதுநலம் விடுத்து தங்கள் சுய நலத்துக்காக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்படக்கூடாது என்றும், ரஜினிமக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மேலும்,ரஜினி மக்கள் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது மக்கள் விரோத செயல் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க