March 23, 2018
தண்டோரா குழு
ரூ 5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்திற்கு அருகில்பொதுக்கணக்காளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் அருண்கோயல் என்பவர் தலைமை அலுவலராக உள்ளார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் கணக்கு அலுவலர்களை நியமிப்பதில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர்கள் சிலர் சிபிஐக்கு புகார் அளித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையில், தலைமை கணக்கு அதிகாரி அருண் கோயலை கைது செய்யக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரூ 5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் பொது கணக்காளர் அருண் கோயல் மற்றும் கஜேந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.தேனாம்பேட்டை அலுவலகத்தில் காலை 10 மணி முதல், சிபிஐ சோதனை நடைபெற்ற நிலையில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.