March 23, 2018
தண்டோரா குழு
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரப்பனின் சகோதரர் மாதையன் நெஞ்சு வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை வழக்கு தொடர்பாக கடந்த 1987 ஜூலை 28-ம் தேதி வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கடந்த 1997-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.அவரது மேல்முறையீட்டு மனு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் மாதையன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதில் பல ஆண்டுகளாக சிறையில் முதிர்வயதால் மிகுந்த அவதிப்படுகிறேன். எனது நன்னடத்தை,வயது முதிர்வு மற்றும் அதிக ஆண்டு சிறைவாசம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதின்றம் தமிழக அரசு தனக்குள்ள அரசியல் அமைப்பு சட்டம் 161 அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்யலாம் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மாதையன் இன்று(மார்ச் 23)காலை7;45 மணியளவில் நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.