March 23, 2018
தண்டோரா குழு
சந்திராயன் 2 விண்கலம் அக்டோபரில் தான் விண்ணில் செல்லுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திராயன் 2 நிலவில் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய இஸ்ரோ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.இந்த விண்கலம் நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்பட்டது.
சந்திராயன்-2 இந்த வருடம் ஏப்ரல் மாதம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஜிஎஸ்எல்வி ஜி-சாட் வரும் 29 தேதியும்,ஐஆர்என்எஸ் செயற்கைக்கோள் ஏப்ரலிலும் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.