• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு மனோக்ஞநாத சுவாமி திருக்கோவில்

September 7, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு மனோக்ஞநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர்.

அம்பாள் : அருள்மிகு அநூபமஸ்தனி.

மூர்த்தி : பக்தாபீஷ்டதாயினி, பஞ்சமூர்த்தி, பிரம்ம லிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, பைரவர்,  நவக்கிரகம்.

தீர்த்தம் : தேவி தீர்த்தம்.

தலவிருட்சம் : பஞ்ச வில்வம், பலாமரம்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் அதிசயம் என்ன என்றால் இங்குள்ள நீலகண்டேஸ்வரர் ஆலகால விஷத்தை உண்டதினால் அவர் தொண்டையில் தங்கி இருந்த அந்த விஷத்தன்மையைக் குறைக்க நல்லெண்ணை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள்.அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எண்ணை அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணையையும் லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுகிறது.

தொடரும் அதிசயம் என்ன என்றால்,எத்தனை எண்ணை ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அதை துணியினால்  துடைப்பது இல்லை,தண்ணீர் ஊற்றி அலம்புவது இல்லை.ஊற்றப்படும் எண்ணையும் கீழே  வழிவதே இல்லை.  லிங்கமே அதை உறிஞ்சி விடுகிறது.மறுநாள் சென்று பார்த்தால் எண்ணெய் ஊற்றிய அடையாளமே தெரியாமல் லிங்கம் உலர்ந்து காணப்படும்.

அபிஷேகம் செய்யப்படும்  எண்ணைய் அனைத்தும் எங்கு சென்று மறைகின்றது என்பது இத்தனை காலமும் யாருக்கும்  புலப்படவில்லை.எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும் சிவலிங்கம் வழுவழுப்பாக இருப்பதற்கு மாற்றாக சொர சொரப்பாகவே உள்ளது.அங்கு உள்ள லிங்கத்துக்கு  அபிஷேகம் செய்த எண்ணையை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

மூலவருக்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் பாணத்திற்கு உள்ளே சென்றுவிடும்.அம்பாளே சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக ஐதீகம்.இங்கு உள்ள பலாமரத்தின் சுளையை  சுவாமிக்குப் படைக்காமல் வெளியில் எடுத்து சென்றால் கெட்டுவிடுகிறது.மிருத்யு தோஷம், ராகு  தோஷம் ஆகியவற்றை நிவர்த்திக்கும் தலம்.

மேலும் படிக்க