March 22, 2018
தண்டோரா குழு
புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன்,சங்கர்,செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது.இதையடுத்து,இவர்கள் மூன்று பேர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில்,இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இவர்களுடைய நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
ஆளுநர்கள் தன் விருப்பம்போல் செயல்பட தொடங்கினால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அதிகாரம் இல்லாத அரசாக மாறிவிடும்.புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என்பதை ஏற்க முடியாது.புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், மேல்முறையீடு செய்யும் என நம்புகிறேன். பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு இறுதியானது அல்ல என்றார்.