March 22, 2018
தண்டோரா குழு
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக்கூடாது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை சாலைகளில் சிறார்கள் தங்களது பெற்றோரின் வாகனத்தை ஓட்டுவதுடன் பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர்.இதனால் அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும்,ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.1,000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை என்றும்,வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.