March 22, 2018
தண்டோரா குழு
கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது போலி கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் வீடு, மதுராந்தகம் அருகே உள்ள நகை தயாரிப்பு கூடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.