March 21, 2018
தண்டோரா குழு
ஸ்டாலின் மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும்,ஆழமாக சிந்திக்காமல் ஆராயாமல் எது எடுத்தாலும் பாஜக என்று சொல்லும் போது பதற்றத்தை ஏற்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த 7ஆம் தேதி கோவை மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட குறுகிய காலத்தில் மீண்டும் மாவட்ட தலைவர் வீட்டில் நடந்துள்ள சம்பவம் அபாயகரமான நிகழ்வாக உள்ளதாகவும், கோவை போன்ற நகரங்களில் இதுபோன்ற சம்பவம் தொடர்வது காவல்துறையினர் எந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்கின்றனர் என்பதை தெளிவுப்படுத்துவதாக கூறினார்.
எச்சரிக்கையாக கையாள வேண்டியதை, அஜாக்கரதையாக காவல்துறையினர் கையாண்டு உள்ளதாகவும்,காவல்துறையினரை கண்டித்தும்,உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் வரும் 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவையில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.
மற்ற சம்பவத்தற்கு தெரிவிக்கப்படும் கண்டனங்கள் பாஜக தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது தமிழகத்தில் எந்த தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காத பாராபட்சமான சூழ்நிலை நிலவுவதாகவும், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு துட்சமாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டவர், கொலைவெறி நோக்கத்தோடு நடந்த சம்பவம் என்று சந்தேகத்திற்கிடமான வகையில் தெரிவதாகவும், தாக்குதலுக்கு உள்ளாவதற்கே பாஜகவை சேர்ந்தவர்கள் இருப்பதை போல் தமிழக அரசியல் கட்சிகள் நினைப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
இந்து மதம் சார்ந்த நிகழ்சிகள் எதுவும் நடக்கக்கூடாது என்றால் எப்படி? எத்தனை நாட்கள் வாழ்வை நடத்த போராட வேண்டியது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியவர், காவல்துறையினர் அச்சுறுத்தல் உள்ள நபர்களை கண்டறிந்து பாதுகாப்பு வழங்குவதுடன், மத்திய அரசு வரை செல்லாத அளவிற்கு இந்த சம்பவத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
குறிப்பிட்டு அரசியல் கலவரம் ஏற்படுத்தவே எச்.ராஜாவை முன்கூட்டியே கைது செய்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியுள்ளதாக குற்றச்சாட்டியவர், நடு ரோட்டில் அமரும்போது சட்டம் ஒழுங்கு கெடுகிறதா? அல்லது ரதம் வரும் போது சட்டம் ஒழுங்கு கெடுகிறதா?? என்றும் கேள்வி எழுப்பினார்.