• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் படம் போட்ட டி-ஷர்ட்டுடன் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி

March 21, 2018 தண்டோரா குழு

மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ இன்று பெரியார் உருவம் பதித்த  கருப்பு சட்டை அணிந்து  சட்டப்பேரவைக்கு வந்துள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நேற்று கேரளா வழியாக தமிழக எல்லையான செங்கோட்டை வந்தடைந்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தன.

சட்டப்பேரவையிலும் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ரத யாத்திரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதல்வர் விளக்கமளித்தும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்-ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர்.சட்டப்பேரவையில் கூச்சல் ஏற்பட்ட நிலையில் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி இரண்டு கைகளையும் உயர்த்தி ரத யாத்திரைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டதோடு,சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடுபட்டார். இதனால் சட்டப்பேரவை கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. பின்னர் அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க