• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தது யார்? யார்? விசாரணை ஆணையத்தில் சசிகலா விளக்கம்

March 21, 2018 தண்டோரா குழு

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார் யார் என்பதை விசாரணை ஆணையத்தில் பிரமாண பத்திரத்தில் சசிகலா விளக்கமளித்துள்ளார்.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், 2015 மற்றும் 2016ம் ஆண்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் தான் வீடியோ எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நான்கு முறை வீடியோ பதிவு செய்ததாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார். அனைத்து வீடியோக்களும் ஜெயலலிதாவின் அனுமதி பெற்றே எடுக்கப்பட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.

அதைப்போல் செப்.22-ம் தேதி இரவு 9.30 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தவறி விழுந்ததாக சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாகவும் உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்ததாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.,வின் பாதுகாவலர் 2 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உடனடியாக அழைக்கப்பட்டதாகவும் அப்பல்லோவுக்கு தகவல் கூறியபின் ஆம்புலன்ஸ் வந்ததாக சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெ.,வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் ஜெ., சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்டோபர் 22ந் தேதி ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனையில் பார்த்ததாக சசிகலா கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 27ந் தேதி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அழைத்து வரப்பட்ட போது தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி தான் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசியதை ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்த்ததாகவும் சசிகலா கூறியுள்ளார்.

மேலும் படிக்க