March 21, 2018
தண்டோரா குழு
சென்னையை தொடர்ந்து கோவையிலும் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட துவங்கி உள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் தினமும் வரும் பேருந்தை ஒவ்வொரு ஆண்டும் அலங்கரித்து மேள தாளங்களுடன் பஸ் டே கொண்டாடுவது வழக்கம் இதற்கு எதிர்ப்பு ஆதரவும் கிளம்பி வரும்.இந்த பஸ் டே கலாச்சாரம் தற்போது கோவையலும் துவங்கி உள்ளது.
திருப்பூரில் இருந்து கோவை வரும் PNK SRT என்ற தனியார் பேருந்தில் அதிகளவு மாணவர்கள் கோவைக்கு வருகின்றனர். இன்று கோவை வந்த அந்த பேருந்தை மாலைகள் போட்டு அலங்கரித்து மேள தாளத்துடன் கோவை கொடீசியாவில் இருந்து ஹிந்துஸ்தான் கல்லூரி வரை ஊர்வலமாக பேருந்தின் முன் நடனமாடி கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர்.சென்னையை தொடர்ந்து தற்போது கோவையில் பேருந்து தினம் கொண்டாட்டம் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.