March 20, 2018
தண்டோரா குழு
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா!உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்” என்று குறிப்பிட்டுள்ளார்.