March 20, 2018
தண்டோரா குழு
கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார்.
சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டிட்டுந்தார்.
இதையடுத்து,அரசியல்சந்திப்புகள்கூடாது,தஞ்சாவூரைவிட்டுவெளியேறக்கூடாது,செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து சசிகலா தஞ்சாவூர் செல்கிறார்.