• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை வென்றார் பிரித்தானியப் பெண் ஆசிரியர்

March 19, 2018 தண்டோரா குழு

உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருதையும், அதற்கான பரிசுத் தொகையான 65 கோடி ரூபாயையும் பிரிட்டனைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின்ப்ரெண்ட்  பகுதியில் உள்ள ஆல்பெர்ட்டன் பள்ளியில் கலை மற்றும் ஜவுளிப் பாடப் பிரிவு ஆசிரியையாக பணியாற்றுபவர் ஆன்ட்ரியா ஜபிராகோ(39).படிப்பறிவு மிகவும் குன்றிய, வன்முறை நிறைந்த பகுதியில் பணியாற்றிய இவர், பெண்கள் விளையாட்டில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில்,இவருக்கு உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருது துபாயில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இவ்விருதினை துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரசீது வழங்கினார். 40 மொழிகள் பேசப்படுகின்ற இப்பள்ளியில்,விளையாட்டு,இசை மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் பள்ளியை முன்னேற்றியமைக்கு, இங்கிலாந்தின் சார்பில் ஆன்ட்ரியா ஜபிராகோ தேர்வு செய்யப்பட்டார். 173 நாடுகளில் இருந்து 30,000 க்கும் அதிகமான பெயர்கள் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.ஐந்து ஆண்டுகள் இவர் தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றும் பட்சத்தில் பரிசுத் தொகை தவணை முறையில் வழங்கப்படும்.

 

மேலும் படிக்க