• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு

March 19, 2018 தண்டோரா குழு

சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. கடந்த அக்டோபர் மாதம் தனது கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் சசிகலா பரோலில் வெளிவந்தார்.

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது.

இதற்கிடையில்,  நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.ஆனால், சசிக்கலாவிற்கு பரோல் வழங்க
சிறைத்துறை மறுத்துள்ளது.

அண்மையில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க