• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் – கேசி பழனிச்சாமி

March 17, 2018 தண்டோரா குழு

ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் என்று  கட்சியில் இருந்து நீக்கபட்ட கே.சி.பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கேசி பழனிசாமி பேசினார். இதனால் அவரை முதல்வர் பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினர்.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கேசி பழனிச்சாமி, 

சர்வாதிகார மனப்பான்மை உடன் ஓ.பி.எஸ்., இபிஎஸ் செயல்படுகின்றனர். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதில் டெல்லியின் ஆதிக்கம் உள்ளதுடெல்லியில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது செல்லாது, ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள். அதிமுகவில் இரட்டை தலைமையால் பல பிரச்சனைகள் உள்ளன. ஓ.பி.எஸ்., இபிஎஸ் சுய நலத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும், எடப்பாடியும், ஓ.பி.எஸ்யும் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அதிமுக தனிநபர் சொத்து அல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். அதைபோல், ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வியடைந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம் என அவர் கூறியுள்ளார்.

 

 

மேலும் படிக்க