தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார். ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடைசியாக தமிழில் சிம்புடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். நடிகை ஸ்ரேயா ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், மார்ச் மாதம் திருமணம் என்றும் தகவல்கள் வெளியானது, ஆனால் தேதி கூறவில்லை.
இந்நிலையில் ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12-ந்தேதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு முதல் நாள் அது தொடர்பான கொண்டாட்டங்கள் நடந்தன. மறுநாள் காலை இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்தார்.
ஸ்ரேயா ரகசிய திருமணம் பற்றிய தகவல் இன்று மும்பை சினிமா வட்டாரத்தில் பரவியது. இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அதை அவர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை