• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து கமல் ஹாசன் ஆறுதல்.

March 17, 2018 தண்டோரா குழு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினரைச் சந்தித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காட்டுத் தீ விபத்தில் சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த நிஷா உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ராஜகீழ்ப்பாக்கத்துக்குச் சென்ற கமல்ஹாசன் அனுவித்யாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

ஒருவாரமாக காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில் முன்கூட்டியே எச்சரித்துத் தடுத்திருக்கலாம் என்றும் இந்த விபத்தை பாடமாகக் கொண்டு எதிர்காலத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க