March 16, 2018
தண்டோரா குழு
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், இருக்கைகள் குறைக்க அனுமதிக்க வேண்டும், லைசன்சை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் திரையங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனினும், இந்த வேலைநிறுத்தத்தில் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.மேலும்,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் காரணமாக, சென்னையில் ஏற்கனவே வெளியான படங்களே திரையிடப்பட்டு வருகின்றன.