March 15, 2018
தண்டோரா குழு
நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிதுணி போர்த்தி மாலை அணிவித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் நகரில்பிரதான சாலையில் ஒரே இடத்தில பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரது மார்பளவு சிலைகள் உள்ளன. இந்நிலையில் 3 சிலைகளிலும் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், காவி துணியை போர்த்தி மாலை அணிவித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிலைகள் மீது போர்த்தப்பட்ட காவி துணிகளை வேக வேகமாக அப்புறப்படுத்தினர். மேலும்,சிலைகள் மீது காவித்துணி போர்த்தி மாலை அணிவித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பெரியார், அண்ணா சிலைகள் மீது காவிதுணி போர்த்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிட கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.