March 15, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் முதலமைச்சர் பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றபட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தில் கருப்புச் சட்டையுடன் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி கொண்டுவந்தார்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் தீர்மானம் வாசித்தார். கடந்த காலங்களை போலவே மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் உள்ளிட்ட கட்சிகள் முழு ஆதரவு அளித்தது. இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, சட்டப் பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.