March 15, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத்தயார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தில் கருப்புச் சட்டையுடன் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி கொண்டுவந்தார்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் தீர்மானம் வாசிதார். பின்னர் இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் திர்மானம் தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின் ,
ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி கொண்டிருப்பதற்கு இது நேரமல்லஇதுவரை ஒதுக்கப்பட்ட அளவு நீரை எந்த ஆண்டும் கர்நாடகா வழங்கியதில்லை. விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம்அனைத்துக்கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்கடியான தருணம். காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் மத்திய அரசு அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு உள்ளாகும். இத்தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு தரும். காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயார் என்று ஸ்டாலின் கூறினார்.