• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எந்தந்த துறைக்கு எவ்வளவு நிதி

March 15, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

முதல்வராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு  தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும். அதைப்போல், துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்று முதல் முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

2018- 19ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி:

வருவாய் துறைக்கு 6.144 கோடி
குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி
நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 11,073.66 கோடி
பள்ளி கல்விதுறைக்கு ரூ.27.205.88 கோடி
பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி
உயர்கல்வி துறைக்கு ரூ.4620 .20 கோடி
ரயில்வே பணிகள் திட்டத்திற்கு ரூ.513.66 கோடி
வறுமை ஒழிப்பு ரூ.519.81 கோடி ஒதுக்கீடு
மகளிர் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி
ஜெ., வீட்டை நினைவிடமாக்க ரூ.20 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.347.59 கோடி
பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி
காவல்துறைக்கு ரூ.7877 கோடி ஒதுக்கீடு
மானிய டூவிலர் திட்டத்திற்கு ரூ.250 கோடி
மகளிர் சுகாதார திட்டத்தில் நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி
சுகாதார துறைக்கு ரூ.11,638.44 கோடி
உள்ளாட்சி தேர்தல் நடந்த ரூ.172 கோடி
வேளாண்மை துறைக்கு ரூ.8916 கோடி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி
தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.1,074 கோடி
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.191.18 கோடி
உள்ளாட்சிதுறைக்குரூ.17,869 கோடி
குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,853 கோடி
முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361.60 கோடி
அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,789 கோடி
பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82 கோடி
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,336 கோடி
இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.71.01 கோடி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758 கோடி
கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்த 200.70 கோடி
சத்துணவு திட்டத்திற்கு ரூ.1747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க