• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மின்சாரவாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

March 15, 2018 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று(மார்ச் 15)உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பவர் ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணியாற்றிட அனுமதி வழங்க வேண்டும்,ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டைகளை வழங்கிட வேண்டும்,அமைச்சர் அறிவித்தபடி ஒப்பந்த பணியாளர்களுக்கு 380 ருபாய் சம்பளத்தை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து ஒப்பந்த கூட்டமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.

மேலும்,கடந்த 1ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதற்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க