• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

March 15, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.துணை முதல்வர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட்டாகும்.

2018-2019ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள் :

ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் 7,000 ஏக்கரில் மரங்கள் நடப்படும்.

வீட்டு வசதித்திட்டங்களுக்காக ரூ.2696 கோடி நிதி ஒதுக்கீடு.

2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தகவல் தொழிநுட்பத் துறைக்கு ரூ.158 கோடி ஒதுக்கீடு.

கிராமங்களை வட்டார தலைமையகத்தோடு கண்ணாடி இழை வட வலையமைப்பு மூலம் இணைக்க ரூ.1230 கோடி.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

போக்குவரத்து துறை கடன் நிலுவை செலுத்த முன்பணமாக ரூ.900 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்: மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகை திட்டத்திற்கு ரூ.2717.34 கோடி ஒதுக்கீடு.

புதிய பேருந்துகளை வாங்க ரூ.600 கோடியை அரசு வழங்கும்: 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள 4,593 பேருந்துகள் புதிதாக மாற்றப்படும்.

100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்துக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு.

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு.

எரிசக்தி துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.13964 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.673 கோடி ஒதுக்கீடு.

மேலும் படிக்க