• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.எஸ்.எல். கால்பந்து; இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி!

March 15, 2018 tamilsamayam.com

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சென்னையின் எப்.சி அணி, கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்தன.

இதனையடுத்து ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. புனே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது லெக் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், சென்னை, கோவா இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வரும் 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் இறுதி போட்டியில், பெங்களூரு எப்.சி – சென்னை எப்.சி. அணிகள் மோதுகின்றன.

மேலும் படிக்க