• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% போலிமுகவரி

March 14, 2018 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% போலி முகவரி என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் டிஜிட்டல் வியூகத்தை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் தளமான டுவிப்ளோமேசி அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்கள் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

அதில், பிரதமர் மோடிக்கு 4,03,00,000 பேரில் 2,41,80,000 பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகிலேயே சதவிகிதப்படி மோடிதான் முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு மொத்தம் 60 சதவிகிதம் பேர் பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

அதைபோல் டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 61.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர்களில் 69 சதவீதம் பேர் போலி.பா.ஜ., தலைவர் அமித்ஷாவை ஒரு கோடி பேர் பின் தொடர்கின்றனர். அவர்களில் 67 சதவீதம் பேர் போலி.காங்கிரஸ் எம்.பி., சசிதரூரை 65.5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர்களில் 62 சதவீதம் பேர் போலி.டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை 1.3 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அவர்களில் 51 சதவீதம் பேர் போலி.நடிகர் ரஜினி காந்தை 45.8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர்களில் 26 சதவீதம் பேர் போலி.அமெரிக்க அதிபர் டிரம்ப்பை 4.9 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அவர்களில் 26 சதவீதம் பேர் போலி என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க