• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேர் கைது

March 14, 2018 தண்டோரா குழு

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதள உரிமையாளர்கள் 4 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய திரைப்படங்கள் வெளியான அன்றே அது இணையதளத்திலும் திருட்டு தனமாக சிலர் பதிவேற்றம் செய்து வந்தனர். இதில் முக்கிய இணையதளம் தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம். இந்த இணையதளம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகும் புதிய திரைப்படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்து வந்தது. இதனால், தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு திருட்டு வீடியோ வெப்சைட்டுகளை தடை செய்தபோதிலும், தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை தடை செய்ய முடியவில்லை. வேறு பெயர்களை மாற்றிக்கொண்டாவது அந்த இணையதளம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கேரள வீடியோ பைரசி பிரிவு போலீசார், நெல்லை மற்றும் விழுப்புரத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை நிர்வகித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதில், உரிமையாளரும் அடங்கும் என்கிறது கேரள காவல்துறை வட்டாரம்.

மேலும் படிக்க