• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வெள்ளலூர் கிராமத்தை டிஜிட்டல் கிராமமாக மாற்ற பேங்க் ஆப் இந்தியா தத்தெடுத்தது

March 13, 2018 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் கிராமத்தை பணமில்லா பரிவர்த்தனை செய்யும் டிஜிட்டல் கிராமமாக மாற்ற பேங்க் ஆப் இந்தியா தத்தெடுத்தது.

கோவை வெள்ளலூர் கிராமத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் வங்கி கடன் பெற்று திருப்பி செலுத்துவது, வங்கியில் அதிகளவு வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தகுதிகளாக வைத்துள்ளனர். இந்நிலையில் வெள்ளலூர் கிராமத்தை டிஜிட்டல் கிராமமாக மாற்ற பேங்க் ஆப் இந்தியா தத்தெடுத்துள்ளது.இதற்கான துவக்க நிகழ்ச்சி வெள்ளலூரில் நடைபெற்றது.

பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனர் நீலம் தாமோதரன் முன்னிலையில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கல்விக்கடன் கேட்டு வரும் மாணவர்களை வங்கி அதிகாரிகள் சரியான தகவல்களை கொடுத்து கடனை விரைவாக வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு என வங்கி சார்பாக ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.தொடர்ந்து கிராம மக்களுக்கு டிஜிட்டல் பயன்பாட்டிற்கான ஏ.டி.எம் அட்டைகளும் வழங்கப்பட்டது.இதன்மூலம் கிராமமக்கள் அனைவரும் மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையாக செல்போன் மூலம் பணபரிமாற்றம், மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து  கட்டணங்களும் செலுத்தும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மருதாசலம், புனிதா நாகராஜன் வங்கி மேலாளர்கள் சிட்டி பாபு,ரவீந்திரன்,மித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க