• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஸ்வினியின் உடலை வாங்க மாட்டோம் – உறவினர்கள்

March 10, 2018 தண்டோரா குழு

சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி. நேற்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் அழகேசன் என்பவர்  கத்தியால் குத்தினார்.  இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அழகேசனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினியின் உடற்கூறாய்வு தொடங்கியது. சட்டம் சார்ந்த உதவி பேராசிரியர் கார்த்திகாதேவி முன்னிலையில் மாணவி அஸ்வினியின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மாணவி அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஸ்வினியின் படிப்பிற்கு அழகேசன் எந்த பணமும் அளிக்கவில்லை என்றும் அழகேசனின் குடும்பத்தினர் இங்கு வரும் வரை அஸ்வினி உடலை வாங்க மாட்டோம் என்றும்  அஸ்வினியின் உறவினர்கள் கூறியுள்ளனர். அஸ்வினியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஏற்கனவே புகார் அளித்தும் மதுரவாயல் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க