March 9, 2018
தண்டோரா குழு
சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி. இந்நிலையில், இன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கல்லூரி வாயிலில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.