March 9, 2018
தண்டோரா குழு
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கருணை கொலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீள முடியாத நோயால் தீராத வேதனையில் வாடுபவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம். செயலற்ற நிலையில் இருப்பவர்களையும் கருணைக் கொலை செய்யலாம். மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவேஇந்த உரிமையை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், கருணைக் கொலை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயிர்பிழைக்க வழியில்லாத நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிரிழக்க வைக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.